நாகையில் கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு 109 வீடுகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
நாகையில் கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு 109 வீடுகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

கடந்த 2018- ம் ஆண்டு வீசிய கஜா புயலில், நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெருமளவில் பாதிப்படைந்தது. இதில் சேதமுற்ற மேற்கு பிராந்தியங்கரை, பெரிய கோவில் பத்து, கண்ணரிந்தன் கட்டளை ஆகிய ஊர்களை ஒய்.எம்.சி.ஏ சென்னை அமைப்பு சார்பாக தத்தெடுத்தது. இதனையடுத்து அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 109 வீடுகள் மற்றும் ஆயிரம் பேர் அமரக்கூடிய சமூகநல மண்டபம் ஒன்றையும் இந்த அமைப்பு கட்டிக்கொடுத்துள்ளது.

இந்நிலையில், அந்த வீடுகளையும், சமூகநல மண்டபத்தையும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அத்துடன், பயனாளிகளிடமும் வீடுகளை ஒப்படைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com