கொடைக்கானல் அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து அதில் சிக்கியிருந்தவர்களை பொதுமக்கள் மீட்டுள்ளனர்.
கொடைக்கானல் அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
Published on

திண்டுக்கல்,

குஜராத் மாநிலத்தில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கர்நாடகா வழியாக சுற்றுலா பேருந்து மூலம் கொடைக்கானல் வந்துள்ளனர். அங்கு பல்வேறு சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இன்று காலை சுற்றுலா பேருந்தில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் டம்டம் பாறை அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. அந்த பள்ளத்தில் அதிக அளவில் மரங்கள் வளர்ந்து காணப்படுவதால், பேருந்து பள்ளத்தில் கீழே செல்லாமல் மரங்களுக்கு இடையில் சிக்கியது.

இதையடுத்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து அதில் சிக்கியிருந்தவர்களை கவனமாக மீட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com