ஏலகிரி மலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

ஏலகிரி மலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஏலகிரி மலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
Published on

;ஜோலார்பேட்டை,

ஏலகிரி மலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலைக்கு வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுமார் 20 பேர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஏலகிரி மலைக்கு மினி வேனில் சுற்றுலா வந்தனர். வேனை ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திப்குமார் (வயது 34) ஓட்டினார். ஏலகிரி மலையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள், நேற்று மாலை மாலை 7 மணியளவில் மலையில் இருந்து கீழே இறங்கினர். 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து பாறையின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வாலாஜா குடிமல்லூர் பகுதியை சேர்ந்த சாம்பசிவம் மனைவி சாந்தி (65), காட்பாடி தொப்பலாம் மோட்டூரை சேர்ந்த ராம்குமார் (27), எம்பெருமாள் (41) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். 17 பேர் காயமின்றி உயிர் தப்பினர். தகவலறிந்த ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையின் நடுவில் மினி வேன் கவிழ்ந்ததால் போக்குவரத்து தடைபட்டது. பொக்லைன் மூலம் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com