ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 31-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் நடைபெறுகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்
Published on

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இம்மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு உரிய திட்டநிரல் மற்றும் கால அட்டவணைப்படி சிறந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுவதோடு, இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்பட்டு, அவ்வப்போது மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் தகுதித்தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்கள் இவ்வலுவலக நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் சேருவது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com