சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கல் நடுவழியில் நிறுத்தப்பட்டு, 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
Published on

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கல் நடுவழியில் நிறுத்தப்பட்டு, 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

மனவூர் ரெயில் நிலைய எல்லைக்குள், அரக்கோணம் அருகே நேற்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், மைசூரு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் நான்கு புறநகர் ரெயில்களும் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டன.

இதனால் இந்த ரெயில்களில் பயணம் செய்த அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் அலுவலர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரெயில்வே அலுவலர்களும், ஊழியர்களும் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

40 நிமிடம் தாமதமாக...

சுமார் 40 நிமிடங்களுக்கு பின் சிக்னல் சரிசெய்யப்பட்டது. அதன் பின் ரெயில்கள் புறப்பட்டு சென்றன. இது குறித்து ரெயில் பயணிகள் தெரிவித்த போது தண்டவாளங்கள், சிக்னல் கோளாறு அடிக்கடி ஏற்படுவதால் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் விடுப்பு எடுக்க கூடிய நிலை ஏற்படுகிறது. அடிக்கடி ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. எனவே, தொடர்ந்து இது போன்ற சிக்னல், தண்டவாளங்களில் கோளாறுகள் ஏற்படாமல் இருக்க ரெயில்வே நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com