

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கால் ரெயில் சேவைகள் பாதிக்கப்படுமா? என பல்வேறு தரப்பினரிடையே கேள்வி எழுந்தது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி கூறியதாவது:-
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசிடம் இருந்து தெற்கு ரெயில்வேக்கு, ரெயில்களை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை வரவில்லை. எனவே தமிழகத்தில் தற்போது இயங்கும் அனைத்து ரெயில்களும் முழுமையாக இயங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.