

சென்னை,
தமிழகத்தில் வேளாண் உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவும் வகையில் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு அலுவலர்களாக நியமித்து டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு, மத்தி, மேற்கு, தெற்கு மண்டலங்களாகப் பிரித்து தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் செல்போன் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் வடக்கு மண்டலத்தில் வரும் சென்னை மாவட்டத்திற்கு ஜார்ஜ் என்ற போலீஸ் உதவி கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய செல்போன் எண் 9840814413 ஆகும்.
செங்கல்பட்டு மாவட்டம்- இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் (9789098861), காஞ்சீபுரம்- அன்புசெல்வி (9498149672), திருவள்ளூர்- பத்மஸ்ரீ பவி (9498110143).