போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் வாயிற்கூட்டம்

15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.
போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் வாயிற்கூட்டம்
Published on

கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மண்டல தலைவர் பூபதி தலைமை தாங்கினார். இதில் மாநில சம்மேளன துணை பொதுச்செயலாளர் முருகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாட்ராயன், கரூர் மண்டல கவுரவ தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். அரசின் அறிவிப்புகளை செயல்படுத்தும் போக்குவரத்து கழகங்களுக்கு தேவையான நிதியை பட்ஜெட்டில் ஆண்டுதோறும் ஒதுக்க வேண்டும். தேவையான பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். பஸ்களை இயக்குவதற்கு தேவையான ஊழியர்களை நியமிக்க அரசிடம் வாதாட வேண்டும். தொழிலாளர்களின் வார விடுப்பை மறுப்பது, விடுப்பு வழங்க மறுப்பது ஆகிய நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இறந்துபோன தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான பணப்பலன்களை தாமதமின்றி வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பணப்பலன்களை தாமதமின்றி வழங்கிட வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள டி.ஏ. உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டம் நடைபெற்றது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com