பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் - வாலிபருக்கு ஓசூரில் வரவேற்பு

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொண்டு வாலிபர இன்று ஓசூர் வந்தடைந்தார்.
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் - வாலிபருக்கு ஓசூரில் வரவேற்பு
Published on

ஓசூர்,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விக்ரம் (வயது 23). பி.ஏ. பட்டதாரி வாலிபர். பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை பயணிக்க மே 7-ந் தேதி அன்று தனது நடைப்பயணத்தை தொடங்கினார்.

தேசியகொடியை ஏந்தி பல்வேறு மாநிலங்கள் பயணித்து இன்று ஒசூர் வழியாக தமிழகம் வந்தடைந்தார்.

இந்த பயணத்தை கன்னியாகுமாரியில் நிறைவு செய்ய இருப்பதாகவும், பல்வேறு மாநிலங்களில் சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் தனக்கு உற்சாகமூட்டியதாகவும் அவர்களுக்கு பெண் கல்வி குறித்து எடுத்துரைத்ததாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com