திருச்சி: தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேர் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்; அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 1,500 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திருச்சி,

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது, திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களில் தனியார் பள்ளிகளில் படித்த 1,500 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

அரசு பள்ளி என்றால் வறுமை நிலை என்று இல்லாமல் பெருமை நிலை என்கிற அளவில் உயர்ந்து நிற்கிறது. இது மகிழ்ச்சிக்குரிய விசயம் என கூறினார்.

தனியார் பள்ளிகள் 100 சதவீத கட்டணம் வசூலித்தால் பெற்றோர்கள் தயக்கம் இல்லாமல் புகார் அளிக்க வேண்டும். அப்படி அவர்கள் புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com