உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியையொட்டி தடையில்லா மின்சாரம் - மின்சார வாரியம்

இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியையொட்டி தடையில்லா மின்சாரம் - மின்சார வாரியம்
Published on

அகமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இதில் சொந்த மண்ணில் இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாட உள்ளதால் இந்திய அணியின் பக்கமே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்த நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும் இந்திய அணியின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

உலகக்கோப்பை இறுதி போட்டியை சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com