

சென்னை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக பாஜக ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.இந்தஆலோசனை இன்று மாலை நடைபெறவுள்ளது.
அனைத்து மாவட்ட பாஜக தலைவர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்துகிறார்.