பழக்கடையை சேதப்படுத்திய விவகாரம்: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார், வாணியம்பாடி நகராட்சி ஆணையர்

வாணியம்பாடி நகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பழக்கடையை சேதப்படுத்திய விவகாரம்: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார், வாணியம்பாடி நகராட்சி ஆணையர்
Published on

வாணியம்பாடி,

வாணியம்பாடி நகராட்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சமூக இடைவெளி இன்றி பழங்களை விற்பனை செய்த மூன்று கடைகளில் நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் பழங்களை கீழே தள்ளி கடைகளை மூடினார். இந்த காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனங்களுடன் வேகமாக வைரலானது.ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் பல்வேறு கட்சிகளிடம் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் நேரில் சென்ற நகராட்சி ஆணையர், பழ கடை உரிமையாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் விற்பனை செய்யும் போது சமூக இடைவெளி விட்டு மீண்டும் விற்பனை செய்யவேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு மத்தியில், மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததோடு நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் விடுத்தது.

இந்த நிலையில், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாக ஆணையர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com