நல்லம்பள்ளி அருகே 2-வது நாளாககிராம நிர்வாக அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டம்

நல்லம்பள்ளி அருகே 2-வது நாளாககிராம நிர்வாக அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டம்
Published on

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே மானியதஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஜருகு கிராமத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு இடையூறாக 2 புளியமரங்கள் உள்ளது. மரங்களை அகற்றி தார்சாலையை அளக்ககோரி சம்பந்தப்பட்ட வருவாய்துறையினருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்வில்லை என கூறப்படுகிறது. இதனால் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாயில், கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி சுகாதர சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான வருவாய்த்துறையை கண்டித்தும், கோரிக்கையை விரைந்து நிறைவேற்றகோரியும் ஜருகு கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மானியதஅள்ளி ஊராட்சி தலைவர் சிவசக்தி தலைமையில் பொதுமக்கள், வணிகர்கள் 2-வது நாளாக நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com