வாகனங்களுக்கு அனுமதி சீட்டு பெற வேண்டும்

தேவர் குருபூஜை விழாவிற்கு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டு பெற வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
வாகனங்களுக்கு அனுமதி சீட்டு பெற வேண்டும்
Published on

தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள செல்பவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட சாலை வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும்.

நடைபயணமாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. வாகனங்களில் வெளிப்புறத்தில் நடனமாடிக்கொண்டோ அல்லது மேற்கூரையில் அமர்ந்து கொண்டோ செல்லக்கூடாது. போலீசாரின் முழுமையான தணிக்கைக்கு பின்பு வாகன அனுமதி சீட்டு பெற்று செல்ல வேண்டும்.சோதனை சாவடிகளில் வாகன தணிக்கையின் போதும் போலீசாரால் வழங்கப்படும் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பதோடு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களில் செல்லக்கூடாது. மேலும் வாகனங்களில் ஒலிபெருக்கி, மதுபானங்கள், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கல், கத்தி, கம்பு போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகனங்களில் சேர்ந்து வரும்போது தேவையற்ற முறையில் பிற மதத்தினரையோ, சமுதாயத்தினரையோ புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை வேகமாகவோ ஆபத்தை விளைவிக்கும் வகையிலோ முந்தி செல்ல கூடாது. அனைவரும் விதிகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கேட்டுக்கொண்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com