ரதயாத்திரைக்கு எதிர்ப்பு : சென்னையில் இன்று ஒரே நாளில் 69 இடங்களில் போராட்டம்; 3,314 பேர் கைது

ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று ஒரே நாளில் 69 போராட்டங்கள்; 3,314 பேர் கைது என காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது. #VHPRadhaYatra
ரதயாத்திரைக்கு எதிர்ப்பு : சென்னையில் இன்று ஒரே நாளில் 69 இடங்களில் போராட்டம்; 3,314 பேர் கைது
Published on

சென்னை

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்த ரத யாத்திரை, இன்று ராஜபாளையம் வந்தது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துர், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை வந்து , அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.

கேரளாவிலிருந்து தமிழகம் வரவுள்ள இந்த ரதயாத்திரைமூலம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுமதி வழங்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்திவருகின்றன. மேலும், நேற்று தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக எம்.எல்.ஏ-க்கள் அபுபக்கர், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர். பின்னர், வெளிநடப்புச் செய்தனர்.

தமிழகம் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சட்டப்பேரவையில் தி.மு.க சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரபட்டது. தி.மு.க செயல் தலைவர் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இதற்கு முதல்வர் பதில் அளித்தார். முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என தி.மு.க எம்.எல்.ஏக்கல் அமளியில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து திமுகவினர் வெளியேற்றபட்டனர்.

சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டதிமுகவினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பட்டம் நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யபட்டனர்.

இந்த ரதயாத்திரையை கண்டித்து தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் இன்று ஒரே நாளில் 69 போராட்டங்கள் நடைபெற்றது. 3,314 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்து உள்ளது.

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்தும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், த.மு.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாநகரில் நடந்த சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன் உள்பட 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேயமக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 350 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து 12 இடங்களில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் 410 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து த.மு.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறியலில் ஈடுபட்ட 53 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்லில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து 7 இடங்களில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 170 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராம ராஜ்ஜிய ரத யாத்திரையை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளை சேர்ந்த 14 பெண்கள் உள்பட 215 பேர் கைது செய்யப்பட்டனர்

மு.க.ஸ்டாலின், திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரத யாத்திரையை கண்டித்து திருச்சியில் தி.மு.க. தோழமை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

ராம ராஜ்ய ரதம் தமிழகம் வந்ததையடுத்து தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் மறியல். திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 600 பேர் கைது செய்யப்பட்டனர்

ரத யாத்திரையை கண்டித்து த.மு.மு.க. எஸ்.டி.பி.ஐ. மறியலலில் ஈடுபட்டனர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com