செந்தில் பாலாஜியை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்த விஜய்


செந்தில் பாலாஜியை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்த விஜய்
x

.பாட்டிலுக்கு 10 ரூபாய், பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாட்டு பாடி விமர்சித்தார்.

கரூர்,

கரூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக விஜய் பேசியதாவது;

கரூர் மாவட்டத்தில் மந்திரி..மந்திரின்னு ஒருத்தர் இருந்தார். இப்போது அவர் மந்திரி இல்லை. ஆனாலும் மந்திரி மாதிரி. அவர் யாருன்னு நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? ஒரு க்ளூ வேண்டுமா எனக்கூறி .பாட்டிலுக்கு 10 ரூபாய், பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாட்டு பாடி விமர்சித்தார். கரூர் மாவட்டத்தில் மந்திரியாக இருந்தவர் இப்போது மந்திரியாக இல்லை ஆனாலும் மந்திரி மாதிரி செயல்படுகிறார்.

கரூரில் சமீப நாட்களுக்கு முன்பு நடைபெற்ற 30 பேர் விழா மன்னிக்கணும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மாஜி மந்திரியை பெருமையாக பேசியதை நாம் காதில் கேட்டிருப்போம் ஆனால் இதே முதலமைச்சர் கரூருக்கு எதிர்க்கட்சித் தலைவராக வந்த போது மாஜி மந்திரி குறித்து என்னவெல்லாம் பேசினார் சொன்னார் என்பதை Fact check நண்பர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை யூடியூப் திறந்து பார்த்தாலே அனைவருக்கும் தெரியும்…திமுகவுக்கு இந்த மாஜி மந்திரி தற்போது என்னவாக இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா?

திமுக குடும்பம் ஊழல் செய்யும் பணத்தை 24 மணி நேரமும் விநியோகிக்கும் ஏடிஎம் மிஷின் ஆக செந்தில் பாலாஜி இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்காவல்துறையின் கைகள் இங்கு கட்டப்பட்டுள்ளது… மக்கள்தான் எஜமானர்கள் அவர்களுக்கு மட்டும்தான் பயப்பட வேண்டும் இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாறும் காட்சியும் மாறும் அதிகாரம் கைமாறும் மக்களுக்கான மக்களாட்சி அமையும் அப்போது தெரியும்.. நம்பிக்கையோடு இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்…!” இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story