

சென்னை,
தவெக கூட்டணியில் இணைய காங்கிரஸுக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்
தமிழக அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழ வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணியில் இணைய காங்கிரஸ் கட்சிக்கு, நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அவர், “விஜய் அளிக்கும் இந்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றும் கூறினார். எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.