

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றில் பிசியேதெரபி சிகிச்சை பெற வந்துள்ளார். அப்பேது, அங்கு பணியில் இருந்த உதவி டாக்டர் சந்தோஷ் குமார் என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக அந்த பெண் கூச்சலிட்டதையடுத்து, உள்ளே வந்த பெண்ணின் உறவினர்கள் சந்தோஷ் குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் உறவினர்கள், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பிசியோதெரபி டாக்டர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.