

சென்னை,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்- 2 தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் 94.5 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89.3 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
*1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு "ஏ கிரேடு" வழங்கப்பட்டுள்ளது
*1171 மாணவர்கள் "ஏ கிரேடு" பெற்றுள்ளனர்.
*மாணவர்கள் - 330, மாணவிகள் - 841
*பிளஸ்-2 தேர்வில் 1151-1180க்குள் மதிப்பெண் பெற்றவர்கள் 12,283 - பி கிரேடு
*பிளஸ்-2 தேர்வில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86.87%
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.85% பெற்று முதலிடம்.
*ராமநாதபுரம் 2-வது இடம்-96.77% தேர்ச்சி, ஈரோடு 3வது இடம் 96.69% தேர்ச்சி
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் பின் வருமாறு:-
*கன்னியாகுமரி - 95.75%, நெல்லை - 96.08%, தூத்துக்குடி - 96.44%, ராமநாதபுரம் - 96.77%, சிவகங்கை - 96.18%, தேனி - 95.93%, மதுரை - 93.61%, திண்டுக்கல் - 92.80%
*நீலகிரி - 92.06%, திருப்பூர் - 96.05%, கோவை - 95.83%, ஈரோடு - 96.69%, சேலம் - 92.89%, நாமக்கல் - 96.40%, கிருஷ்ணகிரி - 88.02%, தர்மபுரி - 92.23%
*புதுக்கோட்டை - 92.16%, கரூர் - 94.96%, அரியலூர் - 88.48%, பெரம்பலூர் - 93.54%, திருச்சி - 95.50%, நாகை - 88.08%, திருவாரூர் - 88.77%, தஞ்சை - 92.47%
*விழுப்புரம் - 86.36%, கடலூர் - 84.86%, திருவண்ணாமலை - 91.84%, வேலூர் - 84.99%, காஞ்சிபுரம் - 88.85%, திருவள்ளூர் - 87.57%, சென்னை - 92.99%