

சென்னை
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோருடன் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்ட போது அனைவரும் எழுந்து நின்றனர். அப்போது விஜயேந்திரர் மட்டும் கண்ணை மூடியபடியே தியானத்தில் அமர்ந்து இருந் தார். அதே விழாவில் தேசிய கீதம் பாடும் போது அவர் எழுந்து நின்று மரி யாதை செலுத்தினார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளி யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயேந்திரரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் இது குறித்து கருத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஜெ.தீபா, மதங்களுக்கு அப்பாற்பட்டது தேசப்பற்று. தியானம் செய்வதற்கான இடம் பொதுமேடை அல்ல. தமிழ்த்தாயின் குரல் இனி ஓங்கி ஒலிக்கும். தியானம் கலைப்பீராக... என்று கூறியுள்ளார்.