கழிவுகளை தனியாகப் பிரித்து வழங்க வேண்டும் - சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

சானிட்டரி நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கழிவுகளை தனியாகப் பிரித்து வழங்க வேண்டும் - சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளைத் தனியாக பிரித்து தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. இந்த கழிவுகளை கையாள்வது குறித்து பொதுமக்களிடம் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

எனவே, பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடந்த ஜனவரி 27-ந் தேதி முதல் பிப்ரவரி 15-ந் தேதி வரை 75 ஆயிரத்து 90 கிலோ கிராம் சானிட்டரி நாப்கின், டயப்பர் கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் மணலி எரியூட்டு நிலையங்களில் விஞ்ஞான முறைப்படி எரியூட்டப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் இருந்து 23 ஆயிரத்து 140 கிலோ கிராம், வளசரவாக்கம் மண்டலத்தில் 10 ஆயிரத்து 960 கிலோ கிராம் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.     

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com