சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்கிறோம் - கே.எஸ்.அழகிரி

சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்கிறோம் - கே.எஸ்.அழகிரி
Published on

கோவை,

இது குறித்து கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

'அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அனைத்து துறைகளிலும் தமிழகத்தை சீரழித்த அதிமுக ஆட்சியை மாற்றுவது, மதச்சார்பற்ற கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு ராகுல்காந்தி பரப்புரை செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் ராகுல்காந்தி 5 முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கமல்ஹாசன் தனித்து போட்டியிடுவது, பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பாக அமையும். மத சார்பின்மை பேசும் கட்சிகள் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும். வெற்றி வாய்ப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப காங்கிரஸ் தொகுதிகளை கேட்கும். அதிமுக கதிகலங்கி நிற்கிறது.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என பாஜக முடிவு செய்வது கொடுமையானது. சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்கிறோம். கமல்ஹாசனால் எங்களது கூட்டணி வாக்கு வங்கி பாதிக்க கூடாது என நினைக்கிறோம். மக்கள் நீதி மய்யம் கட்சி. கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com