காஞ்சீபுரம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் 366 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 25 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, தாசில்தார் பிரகாஷ், வருவாய் ஆர்.டி.ஓ. கனிமொழி, வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராஜ், காஞ்சீபுரம் தாசில்தார் பிரகாஷ், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்து சுந்தரம் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு, ஒன்றிய கவுன்சிலர் உலகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமி நீலகண்டன், அஜய் குமார், வடிவுக்கரசி ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com