மோடி என்ன கூறினாரோ அதுவே கருத்துக் கணிப்பாக வந்துள்ளது... ஜூன் 4-க்கு பிறகே உண்மை தெரியும் - முத்தரசன் பேட்டி

ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே உண்மை என்னவென்று தெரியும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தஞ்சாவூர்,

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட குழு நிர்வாகி பக்கிரிசாமி எழுதிய நூலின் வெளியீட்டு விழா தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்தார், எத்தனை பொதுக்கூட்டங்களில் பேசினார் என்பது சாதனையாக ஊடகங்களில் வந்துள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டு காலத்தில் என்ன சாதனை செய்தார் என எந்த இடத்திலும் கூறவில்லை. 2014, 2019-ம் ஆண்டு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன என எந்த பிரசார கூட்டத்திலும் அவர் பேசவில்லை. அதற்கு மாறாக, மக்களின் கவனத்தை திசை திருப்பக்கூடிய வகையில் மதம், சாதி ரீதியான பிரச்சனைகளை பேசினார்.

தோற்போம் என உறுதியாகி விட்ட நிலையில் அருவருக்கத்தக்க பிரசாரத்தை மேற்கொண்டு இருக்கிறார். இந்தியா கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் எனும் நம்பிக்கை உள்ளது. மோடி என்ன கூறினாரோ அதுவே கருத்துக் கணிப்பாக வந்துள்ளது. பிரதமர் கூறியதை ஊடகங்கள் கூறியுள்ளன. மோடியின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே உண்மை என்னவென்று தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com