கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - சசிகலா

காவல்துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - சசிகலா
Published on

சென்னை,

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார், 2 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில், சசிகலா தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். காவல்துறை கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன். காவலாளி மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிரிழப்பிற்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com