பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

கூடலூர் அருகே பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் அகழிகள் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
Published on

கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளான சுரங்கனார் பீட், பெருமாள் கோவில் புலம், கன்னிமார் கோவில் புலம், கல் உடைச்சான் பாறை ஆகிய பகுதிகளில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இங்கு தட்டைப்பயறு, மொச்சை, அவரை ஆகிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் விவசாயிகள் இரவு நேர காவலுக்கு சென்று உரக்க சத்தம் எழுப்பியும், தகரங்கள் தட்டி ஒலி எழுப்பியும் வனவிலங்குகளை விரட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெருமாள் கோவில் புலம் கழுதைமேடு பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அங்கு பயிரிடப்பட்டுள்ள தட்டை, மொச்சை செடிகளை சேதப்படுத்தி வருகிறது. எனவே விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறையினர் அகழிகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com