பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?

சீர்காழி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா ? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
Published on

திருவெண்காடு:

சீர்காழி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா ? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பத்திரப்பதிவு அலுவலகம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் மூலம் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, திருமுல்லைவாசல், செம்மங்குடி, திருவாலி, மங்கைமடம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய சொத்து பத்திரப்பதிவு, திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பத்திரப்பதிவு அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே உள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அலுவலக கட்டிடம் சேதமடைந்த காரணத்தால் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நகர மைய பகுதியில் இருந்த இந்த அலுவலகத்தால் பொதுமக்கள் அதிகளவில் பயன் பெற்று வந்தனர்.

வாடகை கட்டிடம்

தற்போது சீர்காழி பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சென்றுவரவேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

சீர்காழியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டதால், தற்போது வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய பத்திரப்பதிவுத்துறை அலுவலக கட்டிடம் வாடகை கட்டிடத்தில் இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து சேதமடைந்த அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com