பயணிகளுக்கு நிரந்தர குடிநீர் வசதி செய்து தரப்படுமா?

விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு நிரந்தர குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகளுக்கு நிரந்தர குடிநீர் வசதி செய்து தரப்படுமா?
Published on

விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு நிரந்தர குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் வசதி

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்லும் நிலை உள்ளது. ஆனால் பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான நிரந்தர குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.

ஏற்கனவே செயல்பட்டு வந்த குடிநீர் வழங்கும் மையம் முடங்கி விட்டது. தற்காலிகமாக சின்டெக்ஸ் தொட்டியை வைத்து குடிநீர் வினியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 3 நாட்களாக சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீர் விடப்படாததால் பஸ்நிலையத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வலியுறுத்தல்

குடிநீர் தொட்டிக்கு அருகே தான் நகராட்சி சுகாதார அலுவலகம் உள்ளது. ஆனாலும் அங்குள்ள அலுவலர்கள் அதனை கண்டு கொள்ளாத நிலை உள்ளது. தினசரி காலையில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மணி பழைய பஸ் நிலையத்திற்கு வந்து சென்றாலும் இம்மாதிரியான பயணிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யாத நிலையே நீடிக்கிறது.

எனவே நகராட்சி நிர்வாகம் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான நிரந்தர குடிநீர் வசதியை உடனடியாக செய்து தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com