ஆபத்தான பயணிகள் நிழலக கட்டிடம் அகற்றப்படுமா?

கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடியில் ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடத்தை அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆபத்தான பயணிகள் நிழலக கட்டிடம் அகற்றப்படுமா?
Published on

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடியில் ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடத்தை அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆபத்தான பயணிகள் நிழலகம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து திருமயிலாடி, ஓதவந்தான்குடி வழியாக மாதானம், புதுப்பட்டினம் மற்றும் பழையாறு துறைமுகத்துக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலை உள்ளது. இந்த தடத்தின் வழியாக சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொள்ளிடம், புத்தூர் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. ஓதவந்தான்குடியில் நெடுஞ்சாலையின் ஓரத்தில் பயணிகள் நிழலக கட்டிடம் உள்ளது. 20 ஆண்டுகள் முன் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் இருந்த கான்கிரீட் இருக்கைள் இடிந்தும், மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்தும் உள்ளது. மேலும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

அகற்றப்படுமா?

இந்த பயணிகள் நிழலகம் அருகில் குடியிருப்புகள் உள்ளதால் அந்த பகுதி பொதுமக்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் கூடாரமாகவும் இந்த பயணிகள் நிழலகம் இருந்து வருகிறது. இந்த கட்டிடத்தை இடித்து அகற்றக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக ஓதவந்தான்குடியில் உள்ள பழைய பயணிகள் நிழலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com