

மன்னார்குடியில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் மேலவாசல் அருகே ஒரத்தநாடு பிரிவு சந்திப்பு உள்ளது. ஒரத்தநாடு வழியாக வல்லம் நெடுஞ்சாலை சென்று வாகனங்கள் திருச்சிக்கு செல்கின்றன. இதனால் மன்னார்குடியில் இருந்து ஒரத்தநாடு செல்லும் பிரிவில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. மோட்டார் சைக்கிள்கள், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் இரவு நேரங்களில் இந்த இடத்தில் உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் வழிப்பறி, திருட்டு மற்றும் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து இந்த இடத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.