குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

கூத்தாநல்லூர் அருகே ஊட்டியாணியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
Published on

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே ஊட்டியாணியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டியாணி சாலை

கூத்தாநல்லூர் அருகே உள்ள ஊட்டியாணியில் இருந்து தென்னவராயநல்லூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர், நாகப்பட்டினம் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடம். இந்த சாலையை வடபாதிமங்கலம், திட்டச்சேரி, ஊட்டியாணி, ஆத்தூர், தென்னவராயநல்லூர், புள்ளமங்கலம், பாலக்குறிச்சி, சேந்தங்குடி, செருவாமணி மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இந்த சாலையில் மினி பஸ்கள், பள்ளி வாகனங்கள், லாரி, டிராக்டர், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. ஊட்டியாணியில் உள்ள இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் ஊட்டியாணி சாலையை அகலப்படுத்தி தார்சாலையாக சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com