வனத்துறை ஊழியர்களுக்கு பயிலரங்கம்

வனத்துறை ஊழியர்களுக்கு பயிலரங்கம் நடைபெற்றது.
வனத்துறை ஊழியர்களுக்கு பயிலரங்கம்
Published on

தமிழக அரசின் வனத்துறை சார்பில் பெரம்பலூர்- அரியலூர் வன கோட்டங்களை சேர்ந்த வனத்துறை ஊழியர்களுக்கு வனச்சட்டம் மற்றும் நீதித்துறை நடைமுறைகள் குறித்த ஒரு நாள் பயிலரங்கம் பெரம்பலூரில் நடந்தது. பயிலரங்கத்திற்கு பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகணேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற வனச்சரக அலுவலர் சுப்பையா, வனச்சரக அலுவலர் நெல்லை நாயகம் ஆகியோர் வன ஊழியர்களிடையே 1882 வனச்சட்டம் குறித்தும், வன உயிரினங்கள் சட்டம் 1972 குறித்தும், பட்டியலின மரங்கள், பட்டியல் அல்லாத மரங்கள், காப்புக்காடுகள் சம்பந்தப்பட்ட வழக்குகள், பட்டா நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் நடைபெறும் வன குற்றங்கள் குறித்தும், நீதிமன்ற நடைமுறைகள் குறித்தும், வனத்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகள் அனைத்தையும் தெளிவான முறையில் விளக்கி கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com