எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்

நெல்லையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன்(64) உடல்நலக்குறைவால் காலமானார்
எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசின் உ. வே. சா. விருது பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் வயது (64) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையை பூர்வீகமாகக் கொண்டவர். யானை சொப்பனம், திருநெல்வேலி நீர்- நிலம் -மனிதர்கள், வேணுவன மனிதர்கள், பிரேமாவின் புத்தகங்கள் உள்பட மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். வங்கியில் பணிபுரிந்து வந்த நாறும்பூநாதன், விருப்ப ஓய்வு பெற்று அரசுப் பணியை துறந்து, அதன்பின் முழுநேர எழுத்தாளராக தம்மை தமிழுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கிய இவர், இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நாறும்பூநாதன் இன்று (மார்ச் 16) காலை உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அன்னாரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com