

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு உலக சாதனை நிகழ்வு கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், யோகா பயிலும் 112 மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் தொடர்ந்து 50 முறை சூர்யநமஸ்காரம் செய்து புதிய உலக சாதனை படைத்தனர். இந்த உலக சாதனை, வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. இதற்கான சான்றை அந்த உலக சாதனை புத்தகத்திற்கான தீர்பாளர் சிந்துஜா வினீத் வழங்கினார்.