இளம்பெண் பாலியல் பலாத்காரம்

திருமண ஆசை வார்த்தை கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளம்பெண் பாலியல் பலாத்காரம்
Published on

ஊத்தங்கரை

சிங்காரப்பேட்டை அருகே உள்ள புளியனூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி இளம் பெண் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது திருப்பூர் அருகே நார்த்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிராஜ் (வயது 24) என்பவா அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது இளம் பெண்ணும், காளிராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூரில் உள்ள ஓட்டலுக்கு காளிராஜ் அந்த பெண்ணை அழைத்து சென்று திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தவிர புளியனூர் கிராமத்திற்கு அந்த பெண்ணின் வீட்டிற்கு வரும் போதும் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு காளிராஜ் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கேட்டபோது காளிராஜ், அவரது தந்தை சிவராஜ், தாயார் அலமேலு, அக்கா கணவர் ஜெயபால் ஆகியோர் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த இளம்பெண் ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காளிராஜ் உள்பட 4 பேர் பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com