2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

விவாகரத்து பெறாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2-வது திருமணம் செய்த வாலிபர் கைது
Published on

தஞ்சாவூர்;

விவாகரத்து பெறாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கருத்து வேறுபாடு

தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்தவர் மருதுராஜ் (வயது 35). துணிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் திருமங்கலக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து அந்த பெண் கணவனை பிரிந்து தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பலமுறை மருதுராஜ் தன்னுடன் வாழ வருமாறு கேட்டுள்ளார். மேலும் உறவினர்களை வைத்து சமாதானம் பேசியும் எந்த பலனும் ஏற்படவில்லை.

விவாகரத்து பெறவில்லை

இதற்கிடையே அந்த பெண் மருதுராஜூடன் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் மருதுராஜ் தஞ்சை சுங்கான்திடலை சேர்ந்த பெண் ஒருவரை கடந்து ஆண்டு திருமணம் செய்துள்ளார். இதனை அறிந்த மருதுராஜின் முதல் மனைவி தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதில் கூறியிருப்பதாவது:-நானும், எனது மகனும் உயிருடன் இருக்கும் போது, முறையாக விவாகரத்து பெறாமல் எனது கணவர் மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். மேலும் என்னிடம் இருந்து வரதட்சணையாக பெற்ற பொருட்களை திருப்பி கேட்ட போது அவதூறாக பேசுகிறார். இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிரேகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதுராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com