பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட வாலிபர் கைது

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட வாலிபர் கைது
Published on

சமயபுரம்:

கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள அகிலாண்டபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 15-க்கும் மேற்பட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த தாளக்குடி முத்தமிழ் நகர் மெயின் ரோட்டை சேர்ந்த சேகரின் மகன் அப்பாஸ் (வயது 26) என்பவர், டோல்கேட் அருகே பிச்சாண்டவர் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் போலீசாருடன் நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அப்போது அப்பாசுக்கு கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை போலீசார் கண்காணித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள அப்பாஸ் மீது மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com