

கராக்கஸ்,
இரவு விடுதியில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இரு தரப்பினரிடையே மோதல் வெடித்து உள்ளது. அதைத் கட்டுப்படுத்தும் முயற்சியாக அங்கு கண்ணீர்ப்புகை குண்டு வெடிக்கப்பட்டது.
இதைக் கண்டு பதறிப்போன மக்கள் அங்கிருந்து ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது ஏறிச்சென்று பலர் தப்பினர்.