பாகிஸ்தானில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 23 பேர் பலி

பாகிஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 23 பேர் பலி
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் இருந்து ஸ்கார்டு நகருக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் சுமார் 30 பயணிகள் இருந்தனர்.

கில்கித் நகருக்கு அருகே ரவோன்டு என்ற இடத்தில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் தறிகெட்டு ஓடிய பஸ் சாலையோரம் உள்ள பல அடி ஆழம் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த கோரவிபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் கைபர் பக்துங்வா மாகாணத்தின் பாபுசார் நகரில் மலையின் மீது மோதி பஸ் விபத்துக்குள்ளானதில் 10 ராணுவ வீரர்கள் உள்பட 27 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com