ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு

ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யாமல் தனிநபர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் ஆகும்.
ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
Published on

சிட்னி,

இந்த நிலையில் அங்கு ஏறத்தாழ 2 லட்சத்து 60 ஆயிரம் துப்பாக்கிகள் சட்டவிரோதமாக இருப்பதாக போலீஸ் துறை கண்டுபிடித்தது.
இதையடுத்து இப்படி சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அரசு உத்தரவிட்டது.

இந்த திட்டம் ஜூலை 1-ந் தேதி தொடங்கியது. வரும் 30-ந் தேதி முடிகிறது.
இந்த நிலையில் அங்கு 26 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி நீதித்துறை மந்திரி மிக்கேல் கீனன் கருத்து தெரிவிக்கையில், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அவற்றை ஒப்படைக்க ஏற்ற விதத்தில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது என்று கூறினார்.

அங்கு டாஸ்மேனியா மாகாணத்தில் போர்ட் ஆர்தர் நகரில் 35 பேர் கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 1996, 1997 ஆண்டுகளில் 6 லட்சத்து 43 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com