

ராவல்பிண்டி,
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் மாவட்டத்தில் இருந்து ராவல்பிண்டி நகர் நோக்கி பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த ரெயில் ராவல்பிண்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, ரெயில்வே கிராசிங் அருகே வாகனம் ஒன்று நின்றுள்ளது. அதன்மீது ரெயில் மோதியபடி சென்றுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ பகுதியிலேயே கொல்லப்பட்டார். காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.