ராணுவ தாக்குதலில் 8 தலீபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.
ராணுவ தாக்குதலில் 8 தலீபான் பயங்கரவாதிகள் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அங்கு ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 8 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர். அங்குள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் நகர்-இசராஜ் மாவட்டத்தில் நடத்திய வான்வழி தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் லோகர் மாகாணத்தின் சார்க் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானதாகவும் அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது.

மேலும் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com