80 தலீபான் பயங்கரவாதிகள் பலி; ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து பயங்கரவாதத்தை அரங்கேற்றி வருவதால் அவர்களுக்கு எதிராக ராணுவம் அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
80 தலீபான் பயங்கரவாதிகள் பலி; ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி
Published on

இந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 80 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கஜினி, லோகர், ஜாபுல், ஹெராத், பரா, ஹெல்மாண்ட், பாக்லான் மாகாணங்களில் ராணுவம் தாக்குதல் நடத்தித்தான் 80 தலீபான்களை கொன்றிருப்பதாகவும், 59 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்களையும், ராணுவத்தையும் குறிவைத்து தலீபான்கள் புதைத்து வைத்திருந்த 115 கண்ணி வெடிகளை ராணுவம் கண்டுபிடித்து செயலிழக்க வைக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தலீபான்கள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தலீபான்கள் தரப்பில் இதை உறுதி செய்யவும் இல்லை. மறுக்கவும் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com