அல்கொய்தா தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பாக உள்ளனர் : ஐநா அறிக்கை

ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா தலைவர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்கொய்தா தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பாக உள்ளனர் : ஐநா அறிக்கை
Published on

ஒசாமா பின்லேடன் மரணத்திற்கு பிறகு அல்கொய்தா இயக்கம் அமைதியாக இருப்பது போல் காட்சியளித்தாலும் அது லஷ்கர் இ தொய்பா, ஹக்கானி போன்ற இதர தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ஐநா சபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அதன் தலைவர்கள் பாதுகாப்புடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்கொய்தா இயக்கத்தின் தற்போதைய தலைவரான அய்மான் -அல் -ஜவாரியின் உடல்நலம் குறித்தும் இருப்பிடம் குறித்தும் எந்த தகவலும் இல்லை என்றும் அந்த அறிக்கை சந்தேகம் எழுப்புகிறது. ஐ.எஸ். இயக்கம் சிரியாவிலும், ஈராக்கிலும் அதிகாரத்தை இழந்து வரும் நிலையில், பழி வாங்கும் நடவடிக்கைகளுக்காக சிலீப்பர் செல்களை ஏற்படுத்தி வருகிறது என்றும் ஐநா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானில் தாலிபன்களுடன் நெருக்கமாக செயல்படும் சர்வதேச தீவிரவாத இயக்கங்களால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com