ஆச்சரியமூட்டும் 6 யோகா நிலைகள்; அசத்திய அதிசய நாய்...

செல்ல பிராணிகளில் ஒன்றான, லேப்ரடார் வகையை சேர்ந்த நாய் ஒன்று தனது உரிமையாளருடன் சேர்ந்து 6 யோகா நிலைகளை செய்து அசத்தியுள்ளது.
ஆச்சரியமூட்டும் 6 யோகா நிலைகள்; அசத்திய அதிசய நாய்...
Published on

சமூக ஊடகங்களில் பல ஆச்சரியப்படும் விசயங்கள் வெளியிடப்படுவது உண்டு.  அவற்றில் சமீபத்தில், செல்ல பிராணிகளில் ஒன்றான, லேப்ரடார் வகையை சேர்ந்த நாய் ஒன்று தனது உரிமையாளருடன் சேர்ந்து 6 யோகா நிலைகளை செய்து அசத்தியுள்ளது.

மேக்னஸ் பென்ற பெயரிடப்பட்ட அந்த ஆண் நாய், பெண் உரிமையாளர் செய்து காட்டும் யோகா நிலைகளை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் செய்கிறது.  இதுபற்றிய வீடியோ வெளிவந்து வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், முதலில் மேக்னசின் உரிமையாளர் யோகா விரிப்பு ஒன்றை தரையில் விரிப்பதுடன் வீடியோ தொடங்குகிறது.  அவருடன் சேர்ந்து மேக்னசும் வேறொரு யோகா விரிப்பு ஒன்றை தரையில் விரிக்கிறது.

அதன்பின் உரிமையாளரை போன்று ஊர்ந்து சென்று விரிப்பில் படுத்து கொள்கிறது.  அடுத்த நிலையில், அந்த அழகிய நாய் தனது முன்னங்கால்களை உரிமையாளரின் கால் மூட்டுகள் மீது வைத்தபடி அமர்ந்து இருக்கிறது.  அந்த உரிமையாளர் பின்புறம் படுத்தபடி எழுந்து மேக்னசை நோக்கி செல்கிறார்.

அடுத்து மேக்னஸ் செய்த யோகா பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது.  ஆச்சரியமூட்டும் வகையில், 4 கால்களில் நின்றபடி அப்படியே முன்னோக்கி வளைந்து சென்று மேலே எழும்புகிறது.

அதன்பின், அமர்ந்தபடி தனது முன்னங்கால்களை கீழ் நோக்கி மடக்கியபடி யோகா நிலையை செய்கிறது.

இறுதியில் உரிமையாளரை போன்று, வானை நோக்கி படுத்தபடி, காலை முன்னோக்கி வைத்து இருக்கும் யோகா நிலையுடன் வீடியோ  நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com