இலங்கையில் 16 விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு

2021இல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த 16 விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
இலங்கையில் 16 விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு
Published on

கொழும்பு

இலங்கையில் , 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த 16 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் நீண்டகாலமாக நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2022 ஜனவரி 13 நிலவரப்படி மேலும் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com