பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்; கிருஷ்ணர் சிலை உடைப்பு

பாகிஸ்தான் நாட்டில் இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி கிருஷ்ணர் சிலையை உடைத்து உள்ளனர்.
பாகிஸ்தானில் இந்து கோவில் மீது தாக்குதல்; கிருஷ்ணர் சிலை உடைப்பு
Published on

லாகூர்,

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதேபோன்று பாகிஸ்தான் நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு அவரது பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, கோவில்களில் வழிபடுவது வழக்கம். இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் சங்கார் மாவட்டத்தில் கிப்ரோ என்ற இடத்தில் அமைந்த கிருஷ்ணர் கோவிலில் இருந்த அவரது சிலையை மர்ம நபர்கள் அடித்து, உடைத்து உள்ளனர்.

இதனை, பாகிஸ்தானின் சமூக ஆர்வலர் ரஹத் ஆஸ்டின் கூறும்போது, இஸ்லாமுக்கு எதிராக பேசினர் என தவறான குற்றச்சாட்டுகளால் கூட கும்பல் தாக்குதல் அல்லது மரண தண்டனை வரை செல்கிறது.

ஆனால், முஸ்லிம் அல்லாத கடவுள்களுக்கு எதிரான குற்றங்கள் தண்டிக்கப்படாமலேயே செல்கின்றன என்று டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com