அமெரிக்காவில் கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்த நடிகை

அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார்.
அமெரிக்காவில் கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்த நடிகை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க நடிகை செலீனா கோமஸ் (வயது 26). இவர் பாடகி, பாடலாசிரியர், நடிகை என பல முகங்களை கொண்டவர் ஆவார். அங்கு டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அங்குள்ள மிட்லோத்தியன் நகரில் அவரது நெருங்கிய உறவுப்பெண் பிரிசில்லா டி லியோன் திருமண விழா 19-ந் தேதி நடந்தது. இந்த விழாவில் செலீனா கோமஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கருப்பு நிறத்தில் கவர்ச்சி உடையில் தோன்றி அசத்தினார். அவர் ஆற்றிய வரவேற்பு உரையை கவனித்தார்களோ, இல்லையோ அவரது உடையை அனைவரும் கவனித்து, புகழ்ந்து தள்ளினர்.

திருமண விழாவில் மணப்பெண்ணின் தோழியாக அவர் பவனி வந்து அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்து விட்டார்.

அத்துடன் நிறுத்தவில்லை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டு வரவேற்பை அள்ளினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com