

ஷாங்காய்,
சீனாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஷாங்காய் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், கார் ஒன்று தாறுமாறாக ஓடி, பாதசாரிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் 18 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக வாகனங்களை மக்கள் கூட்டத்திற்குள் செலுத்தி தாக்குதல் நடத்தும் முறையை பயங்கரவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.